முகப்பு
செய்திகள்

தலைவி படப் பாடல் விடியோ வெளியீடு

திரையரங்குகளில் செப்டம்பர் 10 அன்று வெளியாகவுள்ளதாகச் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:02 AM
பகிர்:

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவி-யில் கங்கனா ரணாவத் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அவரது வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் வகையில் தமிழ், ஹிந்தி மொழிகளில் இத்திரைப்படம் தயாராகியுள்ளது. 

விஜய் இயக்கியுள்ள இப்படத்துக்கான கதையை பாகுபலி, மணிகர்னிகா திரைப்படங்களின் கதாசிரியரும் இயக்குநர் ராஜமெளலியின் தந்தையுமான கே.வி.விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங் ஆகியோர் தயாரித்துள்ளார்கள். இசை - ஜி.வி. பிரகாஷ். 

தலைவி படம் ஏப்ரல் 23 அன்று வெளியாகவிருந்த நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக அதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. திரையரங்குகளில் செப்டம்பர் 10 அன்று வெளியாகவுள்ளதாகச் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள உந்தன் கண்களில் என்னடியோ பாடலின் விடியோ வெளியாகியுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →