செய்திகள்

நடிகை ரவீனாவின் தந்தை மரணம் : விஷால் இரங்கல்

நடிகையும், பின்னணிக் குரல் கலைஞருமான ரவீனாவின் தந்தை ரவீந்திரநாத் உடல் நலக்குறைவால் காலமானார். 

DIN

நடிகையும், பின்னணிக் குரல் கலைஞருமான ரவீனாவின் தந்தை ரவீந்திரநாத் உடல் நலக்குறைவால் காலமானார். 

'ஒரு கிடாயின் கருணை மனு', 'காவல்துறை உங்கள் நண்பன்' போன்ற படங்களில் கதாநயாகியாக நடித்தவர் ரவீனா. பின்னணிக் குரல் கலைஞரான இவர் 'ஐ' படத்துக்காக எமிஜாக்சனுக்கும், 'கத்தி' படத்துக்காக சமந்தாவுக்கும் குரல் கொடுத்தவர்.

மேலும், காஜல் அகர்வால், மாளவிகா மோகனன் ஆகியோருக்கு தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகிறார். இவரது அம்மா ஸ்ரீஜாவும் பிரபல பின்னணனி குரல் கொடுக்கும் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.  

புகைப்படங்களைப் பார்க்க: ரெட்-ஹாட் அதிதி புததோகி - படத்தொகுப்பு பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

இந்த நிலையில் நடிகை ரவீனாவின் தந்தை ரவீந்திரநாத் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (செவ்வாய்கிழமை) உயிரிழந்தார். இதனையடுத்து நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், ''ரவீனாவின் தந்தை மரணமடைந்த செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். தைரியமாக இரு'' என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT