செய்திகள்

போதைப் பொருள் வழக்கு: தனது புகைப்படம் தவறாக பயன்படுத்தப்பட்டதாக சோனியா அகர்வால் குற்றச்சாட்டு

போதைப் பொருள் வழக்கில் சிக்கிய கன்னட நடிகைக்கு பதிலாக தமிழ் நடிகை சோனியா அகர்வாலின் புகைப்படம் பயன்படுத்தப்படுவதற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

DIN

போதைப் பொருள் வழக்கில் சிக்கிய கன்னட நடிகைக்கு பதிலாக தமிழ் நடிகை சோனியா அகர்வாலின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டதற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். 

கடந்த சில மாதங்களுக்கு முன் கன்னட திரையுலகில் போதைப்பொருள் பயன்படுத்துவதாக செய்திகள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த வழக்கில் நடிகை ராகினி திரிவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோரை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தற்போது அவர்கள் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். 

இந்த நிலையில் கடந்த 12 ஆம் தேதி நைஜிரியாவைச் சேர்ந்த தாமஸ் என்பவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கன்னட நடிகை சோனியா அகர்வால் உட்பட பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து, பெங்களூரு ராஜாஜி நகரில் உள்ள சோனியா அகர்வாலின் வீட்டில் இருந்து போதைப் பொருளைக் கைப்பற்றி, அவரைக் கைது செய்தனர். 

இந்த நிலையில் இந்த செய்தி தொடர்பாக சில ஊடகங்கள் தமிழ் நடிகை சோனியா அகர்வாலின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இதற்கு நடிகை சோனியா அகர்வால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில், ''என்னையும், என் குடும்பத்தினரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கிய சில செய்தி நிறுவனங்கள் மீது புகார் அளிக்கவிருக்கிறேன். நான் தற்போது கேரளாவில் ஒரு படப்பிடிப்பில் இருக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாரத் ஃபோர்ஜ் நிறுவனத்தின் லாபம் ரூ.284 கோடியாக உயர்வு!

டிரம்ப்பின் 50% வரிவிதிப்பு பொருளாதார ரீதியிலான மிரட்டல்..! ராகுல் கண்டனம்

கானா நாட்டில் ஹெலிகாப்டர் விபத்து! பாதுகாப்பு, சுற்றுச்சூழல் அமைச்சர்கள் உள்பட 8 பேர் பலி!

அமெரிக்காவின் வரி விதிப்பு நியாயமற்றது: மத்திய அரசு

“கேப்டன் படத்தை, வசனத்தை யாரும் பயன்படுத்த வேண்டாம்!” பிரேமலதா விஜயகாந்த் கறார்!

SCROLL FOR NEXT