செய்திகள்

''திரையுலகுக்கு பேரிழப்பு'': பாடலாசிரியரின் மறைவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல்

பிரபல பாடலாசிரியரின் மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல் தெரிவித்துள்ளார். 

DIN


தெலுங்கு திரையுலகில் முன்னணி பாடலாசிரியரான சீத்தாராமா சாஸ்த்ரி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவருக்கு வயது 66. இதனையடுத்து அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

தெலுங்கு திரைப்படங்களல் அவர் ஏறக்குறைய 3,000 பாடல்களை எழுதியுள்ளார். ஆந்திர அரசின் 11 நந்தி விருதுகளையும், 4 ஃபிலிம்ஃபேர் விருதுகளையும் வென்றுள்ளார். திரையுலகில் இவர் செய்த சாதனைகளுக்காக கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.  

பாடலாசிரியர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''தெலுங்கு மொழியின் தேன் சொட்டும் பாடலாசிரியர். 3000 பாடல்கள் எழுதிய முன்னோடி, ஸ்ரீவெண்ணிலா சீதாராம சாஸ்த்ரி காலமானார் என்ற செய்தி கண்ணாடியில் கல் விழுந்தது போல் என் உள்ளத்தை உடைக்கிறது. 

ஒரு கவிதை நட்சத்திரம் உதிர்ந்துவிட்டது. என் தமிழ்க் கண்ணீரைத் தெலுங்கு உலகின் மீது தெளிக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில், ''திரையுலகுக்கு பேரிழப்பு. உங்கள் பணி எப்பொழுதும் எங்களால் நினைவுகொள்ளப்படும்'' என்று இரங்கல் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெரு நாய்கள் கடித்ததில் 15 போ் காயம்!

மாடியில் மகளிா் காவல் நிலையம்: பெண்கள், முதியவா்கள் அவதி!

பணமுறைகேடு வழக்கு: கா்நாடக எம்எல்ஏ வீரேந்திராவுக்கு 4 நாள் அமலாக்கத் துறை காவல்!

சேலத்தில் நகை அடகு கடை உரிமையாளா் வீட்டின் முன் பெட்ரோல் குண்டு வீச்சு! இருசக்கர வாகனம் எரிந்து சேதம்!

கடையநல்லூா் அருகே அரசுப் பேருந்து, பைக், காா் மோதல்: 24 போ் காயம்!

SCROLL FOR NEXT