செய்திகள்

தமிழின் முக்கிய நிறுவனங்கள் தயாரிக்கும் படத்தில் நாயகனாகும் ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ரிபெல் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

DIN

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள பேச்சுலர் திரைப்படம் நாளை (டிசம்பர் 3) திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் முன்னோட்டம், பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதனையடுத்து வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஜெயில் படம் வருகிற டிசம்பர் 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுமட்டுமல்லாமல் சீனு ராமசாமி இயக்கத்தில் இடி முழக்கம், எழில் இயக்கத்தில் ஆயிரம் ஜென்மங்கள், 4ஜி, செல்ஃபி, அடங்காதே, காதில்க்க யாருமில்லை, அடங்காதே உள்ளிட்ட படங்கள் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளன.

இந்த நிலையில், ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா, திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் சார்பாக சிவி குமார் இணைந்து தயாரிக்கும் ரிபெல் படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. புதுமுக இயக்குநர் நிகேஷ் இந்தப் படத்தை இயக்குகிறார்.

 இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, அருண் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். லியோ ஜான் பால் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஸா மருத்துவமனையில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்! மீட்புப் பணியின்போது மீண்டும் தாக்குதல்!

ஆக. 28 ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி: ஜப்பான் பிரதமர் இஷிபாவுடன் முதல்முறையாக இருதரப்பு பேச்சு!

வெவ்வேறு நட்சத்திரங்களில் நின்ற "சனி" தரும் பலன்கள் என்னென்ன?

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜாமீன்!

கவின் கொலை வழக்கு: நீதிமன்றக் காவல் 15 நாட்கள் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT