செய்திகள்

டிஆர்பியில் எந்த சீரியலுக்கு முதலிடம்?: சன் டிவிக்கும் விஜய் டிவிக்கும் கடும் போட்டி

சின்னத்திரை தொடர்களின் டிஆர்பி ரேட்டிங் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. 

DIN

திரைப்படங்களுக்கு நிகராக சின்னத்திரை தொடர்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. திரைப்பட நடிகர்களைப் போல, ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த சின்னத்திரை நடிகர்களுக்கு சமூக வலைதளங்களில் ரசிக பக்கங்களை உருவாக்கி கொண்டாடி வருகின்றனர். 

மேலும் இரண்டு தொடர்களை இணைத்து ஒருங்கிணைப்பது, பிரபல நடிகர்களை சிறப்புத் தோற்றத்தில் களமிறக்குவது என பல்வேறு புதுமைகளை செய்து வருகின்றனர். இதன் காரணமாக டிஆர்பியில் யார் முன்னணியில் இருக்கிறார்கள் என்று தொலைக்காட்சி தொடர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

இந்த நிலையில் கடந்த வாரம் சின்னத்திரை தொடர்களின் டிஆர்பி ரேட்டிங் குறித்து தகவல் கிடைத்துள்ளது அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா 11.9 ரேட்டிங்குடன் முதலிடத்தில் இருக்கிறது.

இரண்டாம் இடத்தில் பாக்கியலட்சுமி தொடர் இருக்கிறது. மூன்றாம் இடத்தில் சன் டிவியின் கயல் தொடரும் நான்காவது இடத்தில் வானத்தைப் போல தொடரும் இருக்கின்றன. அதற்கு அடுத்த இடத்திலும் சன் டிவியின் சுந்தரி தொடர் இருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

SCROLL FOR NEXT