ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மக்களின் கவனத்தை ஈர்த்தவர் ஜுலி. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார். ஓவியாவுடனான ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக விமர்சனங்களை சந்தித்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அம்மன் தாயி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். ஆனால் அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் ஜுலி அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அதில், மணிஷ் என்பவர் தன்னைக் காதலிப்பதாகக் கூறி தன்னிடமிருந்து இருசக்கரவ வாகனம், நகை மற்றும் பணத்தைப் பெற்றுக்கொண்டு மோசடி செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | பிக்பாஸில் இருந்து மீண்டும் வெளியேறிய அபிஷேக் ?
தன்னிடமிருந்து பணம், நகைகளைப் பெற்றுகொண்ட மணிஷ் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். தற்போது ஜுலியின் புகார் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஜுலி தற்போது அழகு நிலையம் ஒன்றில் வேலை செய்து வருகிறாராம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.