நடிகை சமந்தா புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார். இந்தப் பாடல் சமீபத்தில் படமாக்கப்பட்டது. இந்த நிலையில், புஷ்பா பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில், இந்த குளிர்காலம் சமந்தாவின் நடனத்தால் சூடாகப்போகிறது. புஷ்பா படத்தில் இருந்து ஓ சொல்றியா ஓஓ சொல்றியா பாடல் நாளை (டிசம்பர் 10) வெளியாகவிருக்கிறது. என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற டிசம்பர் 17 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, ஃபகத் ஃபாசில் வில்லனாக நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.