சமந்தா பாடலுக்கு தமிழகத்திலும் வலுக்கும் எதிர்ப்பு: இப்படியொரு காரணமா ?
சமந்தாவின் நடனமாடியுள்ள புஷ்பா பாடலுக்கு தமிழகத்தில் இருந்து எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூனின் 'புஷ்பா' படம் வருகிற 17 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் இந்தப் படத்தின் பாடல் ஒவ்வொன்றாக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.
அந்த வகையில் இந்தப் படத்தில் இருந்து சமந்தா நடனமாடியுள்ள 'ஊ சொல்றியா மாமா' என்றா பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் ஆண்களுக்கு எதிரான கருத்துக்களை கொண்டிருப்பதாக சில சர்ச்சைகளையும் சந்தித்துள்ளது.
அந்த வகையில் தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் சார்பாக இந்தப் பாடலை தடை செய்ய வேண்டும் எனவும், இல்லையெனில் சமந்தா உள்ளிட்ட படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
கபிலன் எழுதியுள்ள இந்தப் பாடலை தமிழில் ஆண்ட்ரியா பாடியுள்ளார். புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ராஷ்மிகா நடிக்க, வில்லனாக பிரபல மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் நடித்துள்ளார்.