செய்திகள்

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் ஹிப்ஹாப் தமிழாவின் 'அன்பறிவு'

ஹிப்ஹாப் தமிழாவின் அன்பறிவு திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பாக டி.ஜி.தியாகராஜன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் அன்பறிவு. ஹிப்ஹாப் தமிழா இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தை அஷ்வின் ராம் இயக்கியுள்ளார். 

திரையரங்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எப்பொழுது வெளியாகும் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி நடித்த சிவக்குமாரின் சபதம் நேரடியாக திரையரங்கில் வெளியாகியிருந்தது. இந்தப் படத்தையும் சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரித்திருந்து. அந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் போதிய வரவேற்பு கிடைக்காததால் தயாரிப்பு தரப்பு இத்தகைய முடிவெடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பசிபிக்கில் மேலும் ஒரு படகு மீது அமெரிக்கா தாக்குதல்: 4 போ் உயிரிழப்பு

ரூ.3.14 கோடியில் மழைநீா் வடிகால் பணிகள் தீவிரம்

ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பங்குச் சந்தையில் மீண்டும் சரிவு

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT