செய்திகள்

'புஷ்பா' படத்துக்கு 3 நாட்களில் இவ்வளவு வசூலா? வியப்பில் இந்திய திரையுலகம்

புஷ்பா திரைப்படத்தின் 3 நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. 

DIN

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்திருந்த புஷ்பா திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் படத்துக்கு பெரும் பக்கபலமாக அமைந்திருந்தது. 

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது. உலகமெங்கும் வெளியான இந்தப் படம் 3 நாட்களில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹிந்தியில் மட்டும் இந்தப் படம் 3 நாட்களில் ரூ.12 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. 

 இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் நடைபெறும் என்றும் அடுத்த டிசம்பரில் இந்தப் படம் திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் ஃபகத் ஃபாசில் சிறிது நேரமே வருவது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தது. இந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் அவரது வேடம் வலுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு உடல்நலம் குறித்து முதல்வர் ஸ்டாலின் நேரில் விசாரிப்பு!

ஜம்முவில் ரயில் சேவைகள் மூன்றாவது நாளாக நிறுத்தம்

புன்னகை அரசி... சினேகா!

போராட்டத்தில் பாஜக - காங்கிரஸ் தொண்டர்களுக்கு இடையே மோதல்!

காயத்ரி மந்திரம் பாடி பிரதமர் மோடியை வரவேற்ற ஜப்பானியர்கள்!

SCROLL FOR NEXT