செய்திகள்

''தயாரிப்பாளர் சூர்யாவுக்கு நன்றி'' : நடிகர் கார்த்தியின் பதிவால் ரசிகர்கள் ஆச்சரியம்

சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்துள்ள விருமன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. 

DIN

கொம்பன் படத்துக்கு பிறகு நடிகர் கார்த்தியும் இயக்குநர் முத்தையாவும் இணைந்திருக்கும் படம் கொம்பன். இந்தப் படத்தை 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்துள்ளனர். 

இந்தப் படத்தில் இயக்குநர் ஷங்கரின் இளையமகள் அதிதி நாயகியாக அறிமுகமாகிறார். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். செல்வகுமார் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. 

விருமன் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ள கார்த்தி, இயக்குநர் முத்தையா மற்றும் ஒளிப்பதிவாளர் செல்வகுமாரின் சிறப்பான திட்டமிடல் மற்றும் உருவாக்கம். அதிதிக்கு வாழ்த்துகள். நீ இயல்பாக நடிக்கிறாய். இசையமைப்பாளர் யுவனுடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி. தயாரிப்பாளர் சூர்யாவுக்கு நன்றி. தேனியிலிருந்து விடைபெறுகிறேன் என்று தெரிவித்துள்ளார். 

நடிகை அதிதி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கார்த்தியுடன் இருக்கும் படத்தை பகிர்ந்துள்ளார். அதில், விருமன் மற்றும் தேன்மொழி. உங்கள் ஆதரவுக்கு நன்றி கார்த்தி சார். உங்களுடன் நடித்ததில் எனக்கு பெருமை என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT