துவக்கத்தில் பெரிய சுவாரசியம் இல்லாமல் இருந்த பிக்பாஸ் நாளுக்கு நாள் விறுவிறுப்பு அதிகரித்து வருகிறது. தற்போது இன்னும் பிக்பாஸ் முடிய 2 வாரங்களே உள்ளது.
இந்த நிலையில் தற்போது டிக்கெட் டூ ஃபினாலே என்ற போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெல்பவர்கள் ஃபைனலுக்கு நேரடியாக செல்லலாம். இதனையடுத்து இன்று வெளியான ப்ரமோவில் அமீர் மற்றும் சிபி ஆகியோர் கடுமையாக விளையாடி வருகின்றனர்.
இதையும் படிக்க | புத்தாண்டு வாழ்த்து சொன்ன இளையராஜா - ''இளமை இதோ இதோ...''
இதில் சிபி மட்டும் தடுமாறுகிறார். அமீர் உறுதியாக நிற்கிறார். இந்த நிலையில் அமீர் டிக்கெட் டு ஃபினாலே போட்டியில் அமீர் வென்று நேரடியாக ஃபைனலுக்கு செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.