முகப்பு
செய்திகள்

விஷாலின் சக்ரா பட வெளியீடு ஒரு வாரம் ஒத்திவைப்பு!

விஷால் நடித்துள்ள சக்ரா படத்தின் வெளியீடு ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:25 PM
பகிர்:


விஷால் நடித்துள்ள சக்ரா படத்தின் வெளியீடு ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் எம்.எஸ். ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, ரோபோ சங்கர் நடித்துள்ள படம் - சக்ரா. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியிடப்படுகிறது. 

கடந்த மே 1-ம் தேதி படம் வெளிவருவதாக இருந்த நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக இதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

திரையரங்குகள் மீண்டும் இயங்கத் தொடங்கியதால் பிப்ரவரி 12-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இதன் வெளியீடு ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 19 அன்று சக்ரா படம் வெளியாகும்  எனத் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →