முகப்பு
செய்திகள்

அலுவலகத்துக்கு வந்த விஜய்: திரண்ட ரசிகர்கள்!

விஜய்யை நேரில் காண ரசிகர்கள் திரண்டு வந்திருந்தார்கள். அலுவலகத்துக்குள்...

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
படம் - twitter.com/PraviVj
பகிர்:

சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் ரசிகர்களை இன்று சந்தித்துள்ளார் நடிகர் விஜய். 

பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் விஜய். இசை - அனிருத். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள். கரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் எட்டு மாதங்களாக இயங்கவில்லை. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் சமீபத்தில் வெளியானது. பிறகு, மாஸ்டர் படம் ஜனவரி 29 அன்று அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் சென்னை பனையூரில் உள்ள தனது அலுவலகத்துக்கு விஜய் இன்று வருகை தந்தார். விஜய்யை நேரில் காண ரசிகர்கள் திரண்டு வந்திருந்தார்கள். அலுவலகத்துக்குள் விஜய்யின் கார் நுழைந்தபோது ரசிகர்கள் காரை சூழ்ந்துகொண்டார்கள். இதனால் சில நிமிடங்கள் மட்டும் ரசிகர்களைச் சந்தித்துவிட்டு, விரைவாக அவர் வீடு திரும்பியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவத்தின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. 

முழு கட்டுரையைப் படிக்க →