செய்திகள்

சித்தி 2 தொடரிலிருந்து நடிகை ராதிகா விலகியது ஏன்?

தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் தொலைக்காட்சித் தொடரில் நடிப்பது குறித்த முடிவை எடுக்கவுள்ளார்.

DIN

சித்தி 2 மற்றும் நெடுந்தொடர்களில் இனி நடிக்கப் போவதில்லை என நடிகை ராதிகா அறிவித்துள்ளார்.

ராடன் நிறுவனம் தயாரித்த சித்தி நெடுந்தொடர் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றதால் அதில் கதாநாயகியாக நடித்த ராதிகாவும் சின்னத்திரையின் நெ.1 நடிகையாக ஆனார். தற்போது சித்தி 2 தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் சித்தி 2 தொடரிலிருந்து விலகுவதாக நடிகை ராதிகா சமீபத்தில் அறிவித்தார். சித்தி 2 மற்றும் மெகா தொடர்களில் இருந்து விலகுகிறேன். சன் டிவியில் என்னுடைய சிறந்த வருடங்களையும் கடின உழைப்பையும் அளித்துள்ளேன். என்னுடன் நடித்தவர்களிடமிருந்து சோகத்துடன் விடைபெறுகிறேன் என்று ட்வீட் செய்தார். எனினும் சித்தி 2 தொடர வேண்டும். கவின், வெண்பா, யாழினிக்கு வாழ்த்துகள். சித்தி 2 தொடரைத் தொடர்ந்து பாருங்கள் என்றார். 

சமத்துவ மக்கள் கட்சித் தலைவராக சரத்குமார் உள்ள நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் தன் கணவருடன் இணைந்து தீவிர அரசியல் ஈடுபடவுள்ளார் ராதிகா. சமத்துவ மக்கள் கட்சியில் முதன்மை துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு ராதிகாவுக்கு வழங்கப்பட்டுள்ளதால் சிறிது காலத்துக்குக் கட்சிப் பணியில் முழு நேரமும் ஈடுபட முடிவெடுத்துள்ளார். அதனால் தான் சித்தி 2 தொடரிலிருந்து அவர் விலகியுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் ராதிகா போட்டியிடவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதனால் தேர்தல் வரை அரசியலில் ஈடுபடவுள்ள ராதிகா, தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் தொலைக்காட்சித் தொடரில் நடிப்பது குறித்த முடிவை எடுக்கவுள்ளார். சின்னத்திரையில் இருந்து விலகினாலும் தற்போது சில படங்களிலும் இணையத் தொடர்களிலும்  ராதிகா நடித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”NDA கூட்டணியில் மேலும் சில கட்சிகள்”: டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் Exclusive

உலமாக்களுக்கான ஓய்வூதியம் உயர்வு..! புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் 3வது காலாண்டு வருவாய் உயர்வு!

வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 10

அஜீத் பவாருக்கு நாளை அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு! பிரதமர் மோடி பங்கேற்பு!

SCROLL FOR NEXT