பிப். 26-ல் ஓடிடியில் வெளியாகும் சிபி சத்யராஜ் நடித்த கபடதாரி!
சிபி சத்யராஜ் நடித்துள்ள கபடதாரி படம் அமேசான் பிரைம் ஓடிடியில் நாளை வெளியாகிறது.
சிபி சத்யராஜ் நடித்துள்ள கபடதாரி படம் அமேசான் பிரைம் ஓடிடியில் நாளை வெளியாகிறது.
கவலுதாரி என்கிற கன்னடப் படம் தமிழில் ரீமேக் ஆகியுள்ளது. கபடதாரி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சிபி சத்யராஜ், நந்திதா ஸ்வேதா போன்றோர் நடித்துள்ளார்கள். இயக்கம் - பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, இசை - சைமன் கே கிங். தயாரிப்பாளர் - தனஞ்ஜெயன். தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்றது.
ஜனவரி 28-ல் திரையரங்குகளில் வெளியான கபடதாரி படம், நாளை (பிப். 26) அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாகப் படத்தின் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.