முகப்பு
செய்திகள்

கதாநாயகி ஆனார் 'செல்லமா' பாடகி ஜோனிடா காந்தி!

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:37 PM
பகிர்:

சமீபத்தில் வெளியான டாக்டர் படத்தின் செல்லமா பாடலைப் பாடியதுடன் அதன் விடியோவிலும் இடம்பெற்று ரசிகர்களிடம் நன்கு அறிமுகமானார் பாடகி ஜோனிடா காந்தி.

தில்லியில் பிறந்த ஜோனிடா காந்தி, கனடாவில் வளர்ந்தவர். ஷாருக் கான், தீபிகா படுகோன் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார். தமிழில், ஓ காதல் கண்மணி படத்தில் முதல்முதலாகப் பாடினார். இதன்பிறகு 24, அச்சம் என்பது மடமையடா, காற்று வெளியிடை, வேலைக்காரன், இரும்புத்திரை, கோலமாவு கோகிலா எனப் பல படங்களில் பாடியுள்ளார்.

டாக்டர் படத்தில் இடம்பெற்ற செல்லம்மா பாடலின் விடியோவில் ஜோனிடா காந்தி ஆடிக்கொண்டே பாடியது ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. 

இந்நிலையில் நடிகையாக அறிமுகமாகவுள்ளார் ஜோனிடா காந்தி.

நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் தயாரிக்கும் வாக்கிங்/டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம் என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் ஜோனிடா காந்தி. கதாநாயகனாக சூரரைப் போற்று படத்தில் நடித்த கிருஷ்ணகுமார் நடிக்கவுள்ளார். 

விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய விநாயக், இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படம் குறித்த அறிவிப்பை ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →