செய்திகள்

ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள ஏலே பட டிரெய்லர் வெளியீடு

சமுத்திரக்கனி, மணிகண்டன் போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - அருள்தேவ்...

DIN

பூவரசம் பீப்பி என்கிற படத்தை இயக்கிய ஹலிதா ஷமீம், அடுத்ததாக சில்லுக் கருப்பட்டி என்கிற படத்தை இயக்கி அதிக கவனம் பெற்றார்.

ஹலிதா தற்போது இயக்கியுள்ள படம் - ஏலே. இப்படத்தின் படப்பிடிப்பு பழனியில் 2019-ம் ஆண்டு மே 3 அன்று தொடங்கியது. 

இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி, வால்வாட்சர் ஃபிலிம்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்கள். வால்வாட்சர் மற்றும் வொய்நாட் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து ஏலே படத்தைத் தயாரித்துள்ளார்கள்.  

சமுத்திரக்கனி, மணிகண்டன் போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - அருள்தேவ். பிப்ரவரி 12 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஏலே படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசியவாத சிந்தனையை ஏற்க வழிகாட்டும் அரசியலமைப்புச் சட்டம்! குடியரசுத் தலைவர்

காது கேட்கவில்லையா? அலட்சியம் வேண்டாம்! உங்கள் மூளையைப் பாதிக்கலாம்!!

ராய சிம்மாசனம்

பாரதிய நீதிச் சட்டம்

வணக்கம் வாரணாசி

SCROLL FOR NEXT