செய்திகள்

ரைசா வில்சனின் தி சேஸ்: பரபரப்பான காட்சிகளால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் டிரெய்லர்!

ரைசா வில்சன் நடிப்பில் உருவாகியுள்ள தி சேஸ் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

DIN

ரைசா வில்சன் நடிப்பில் உருவாகியுள்ள தி சேஸ் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாகப் புகழ்பெற்ற ரைசா வில்சன், பியார் பிரேமா காதல் படம் மூலமாகத் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பிறகு, தி சேஸ் என்கிற படத்தில் நடித்துள்ளார். 

ரைசா வில்சன், அனசுயா பரத்வாஜ், ஹரிஷ் உத்தமன், மது நந்தன் நடிப்பில் உருவாகியுள்ள படம் - தி சேஸ். கார்த்திக் ராஜூ இயக்கியுள்ளார். திண்டுக்கல்லில் உள்ள சிறுமலை என்கிற பகுதியில் கரோனா ஊரடங்குச் சமயத்தில் 18 நாள்கள் படப்பிடிப்பை நடத்தியுள்ளார்கள். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகியுள்ளது.

இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. காடுகளில் ரைசாவும் வில்லனும் இதர கதாபாத்திரங்களும் பதற்றத்துடன் ஓடுவது போன்ற காட்சிகள் அமைந்துள்ளன. அதற்கேற்ற பொருத்தமான இசையும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பங்கள் அழைக்கின்றன... தீப்தி சுனைனா!

அன்பினாலே உண்டாகும்... அனைரா குப்தா!

படப்பிடிப்பின்போது... அன்னா பென்!

இரவில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சிவப்பு கம்பளத்தில்... ராஷி சிங்!

SCROLL FOR NEXT