முகப்பு
செய்திகள்

சிம்பு - கெளதம் மேனன் படத்தில் இணைந்துள்ள ஜெயமோகன்

இசை - ஏ.ஆர். ரஹ்மான், பாடலாசிரியர் - கவிஞர் தாமரை. 

Updated On : 8 ஜூலை, 2021 at 5:42 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:05 AM

2010-ல் சிம்பு, த்ரிஷா நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்ட படம் - விண்ணைத் தாண்டி வருவாயா.

இப்படத்தின் தொடர்ச்சியாக 12 நிமிடக் குறும்படத்தை இயக்கி, கடந்த மே மாதம் வெளியிட்டார் கெளதம் மேனன். ஊரடங்குக் காலத்தில் சிம்புவும் த்ரிஷாவும் அவரவர் வீடுகளில் இருந்து தொலைபேசி வழியாக உரையாடும் விதத்தில் முழு நீளக் குறும்படமும் உருவாக்கப்பட்டிருந்தது. இதற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். 

சிம்புவும் கெளதம் மேனனும் மீண்டும் இணைந்துள்ளார்கள்.  விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்குப் பிறகு இருவரும் இணையும் மூன்றாவது படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். 

Advertisement

சிம்பு - கெளதம் மேனன் இணையும் படத்துக்கு நதிகளிலே நீராடும் சூரியன் என அழகான பெயர் வைக்கப்பட்டுள்ளது. இசை - ஏ.ஆர். ரஹ்மான், பாடலாசிரியர் - கவிஞர் தாமரை. 

இந்நிலையில் நதிகளிலே நீராடும் சூரியன் படத்துக்குப் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.