செய்திகள்

மணி ரத்னத்தின் நவரசா பட டீசர் வெளியீடு

சூர்யா, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், சித்தார்த், ரேவதி, பார்வதி உள்ளிட்ட பிரபல நடிகர், நடிகைகள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்.  

DIN

தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகர்களும் இயக்குநர்களும் ஒன்றிணைந்து நவரசா என்கிற படத்தை உருவாக்கியுள்ளார்கள். பிரபல இயக்குநர் மணி ரத்னமும் ஜெயேந்திராவும் தயாரித்துள்ள இப்படத்தை 9 இயக்குநர்கள் இயக்கியுள்ளார்கள். 9 உணர்வுகளையும் 9 கதைகளையும் கொண்ட இப்படத்தை பிரியதர்ஷன், கெளதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ், கார்த்திக் நரேன், ரதிந்திரன், பிஜாய் நம்பியார். வசந்த் சாய், சர்ஜுன் கே.எம்., அரவிந்த் சாமி ஆகியோர் இயக்கியுள்ளார்கள். 

சூர்யா, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், சித்தார்த், யோகி பாபு, அரவிந்த் சாமி, பிரசன்னா, ரேவதி, பார்வதி, ரித்விகா உள்ளிட்ட பிரபல நடிகர், நடிகைகள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்.  

ஏ.ஆர். ரஹ்மான், இமான், ஜிப்ரான், கோவிந்த் வசந்தா போன்ற பிரபல இசையமைப்பாளர்களும் சந்தோஷ் சிவன் உள்ளிட்ட பிரபல ஒளிப்பதிவாளர்களும் இந்தப் படத்தில் பணியாற்றியுள்ளார்கள்.

நவரசா படத்தைத் தயாரித்து அதிலிருந்து கிடைக்கும் வருமானத்திலிருந்து ரூ. 10 கோடியை பெப்சி தொழிலாளர்களுக்கு இயக்குநர் மணி ரத்னம் வழங்குகிறார். பெப்சி திரைப்பட உறுப்பினர்கள் 12,000 பேருக்கு வங்கி மூலமாக மாதம் ரூ. 1500 வீதம் 6 மாதங்களுக்குக் கொடுக்கிறார்கள்.

இந்தப் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 6 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் டீசரும் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மற்ற நாடுகளைப்போல நாமும் துன்புறுத்தக் கூடாது: நிதின் கட்கரி

ஞாயிறு ஒளியில்... ஆஞ்சல் முன்ஜால்!

இந்திரா படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

மருத்துவர்களை விட ஏஐ சிறந்தது: எலான் மஸ்க்

டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகள்... ஆஸ்திரேலிய அணி சாதனை!

SCROLL FOR NEXT