''சிம்புவால் தான் இப்படி நடந்தது'' - 'மாநாடு' பிரபலம் டிவீட் 
செய்திகள்

''சிம்புவால் தான் இப்படி நடந்தது'' - 'மாநாடு' பிரபலம் டிவீட்

'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு விரைவாக முடிவடைந்ததற்கு சிம்புவின் ஒத்துழைப்பு தான் காரணம் என ஒளிப்பதிவாளர் ரிச்சர்டு எம்.நாதன் தெரிவித்துள்ளார்.  

DIN

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் 'மாநாடு'. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், பிரேம்ஜி, கருணாகரன், எஸ்.ஏ.சந்திரசேகர் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். 

யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைக்க, ரிச்சர்டு எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் இருந்து 'மெகரசைலா' என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது படத்தின் படப்படிப்புகள் அனைத்தும் முடிவடைந்துள்ளன. இதனையடுத்து படக்குழுவினர் அனைவரும் கேக் வெட்டிக்கொண்டாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இந்நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளர் ரிச்சர்டு எம்.நாதன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''மாநாடு' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. 85 நாட்கள் திட்டமிடப்பட்டிருந்த படப்பிடிப்பு 68 நாட்களில் முடிவடைந்தது. அதற்கு சிம்பு அளித்த ஒத்துழைப்பு தான் காரணம். இந்த வாய்ப்பை வழங்கிய வெங்கட் பிரபுவிற்கும், என்னுடன் பணியாற்றிய சக கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும் நன்றி'' என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெஸ்ஸி மேஜிக்: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இன்டர் மியாமி!

தங்கம் விலை உயர்வு!

சரிவில் பங்குச் சந்தை! அமெரிக்க வரிவிதிப்பு காரணமா?

எஞ்சாமி தந்தானே... ரசிகர்களைக் கவரும் இட்லி கடை பாடல்!

கூலி படத்துக்கு யு/ஏ சான்று கிடையாது: உயா் நீதிமன்றம்

SCROLL FOR NEXT