அசுரன் தெலுங்கு ரீமேக்: ஜூலை 20-ல் ஓடிடியில் வெளியீடு
அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான நரப்பா, அமேசான் பிரைம் ஓடிடியில் ஜூலை 20 அன்று வெளியாகிறது.
அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான நரப்பா, அமேசான் பிரைம் ஓடிடியில் ஜூலை 20 அன்று வெளியாகிறது.
வடசென்னை படத்துக்கு அடுத்ததாக அசுரன் என்கிற படத்தில் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் இணைந்தது. இப்படத்தை தாணு தயாரித்தார். தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்தார். 2019 அக்டோபர் 4 அன்று வெளியான அசுரன் படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.
அசுரன் படம் தெலுங்கில் நரப்பா என்கிற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. தெலுங்கு அசுரனை தாணுவும் சுரேஷ் பாபுவும் தயாரித்துள்ளார்கள். ஸ்ரீகாந்த் அட்டாலா இயக்கியுள்ளார். தனுஷ் வேடத்தில் பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடித்துள்ளார். இது அவருடைய 74-வது படம். தமிழில் மஞ்சு வாரியர் நடித்த வேடத்துக்கு தமிழ் நடிகை ப்ரியாமணி தேர்வு செய்யப்பட்டார்.
Advertisement
அசுரன் தெலுங்கு ரீமேக்கான நரப்பா, மே 14 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. பிறகு கரோனா ஊரடங்கு காரணமாக இதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் நரப்பா படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ஜூலை 20 அன்று வெளியாகவுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.