திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கம்: கமலுக்கு வழங்கப்பட்ட கெளரவ உறுப்பினர் அடையாள அட்டை
திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தில் நடிகர் கமல் ஹாசனுக்கு கெளரவ உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தில் நடிகர் கமல் ஹாசனுக்கு கெளரவ உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தில் இசையமைப்பாளர் தினா தலைவராக உள்ளார். இந்நிலையில் சுமார் 1500 உறுப்பினர்களைக் கொண்ட இந்தச் சங்கத்தில் நடிகர் கமல் ஹாசனுக்கு கெளரவ உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. கமல் ஹாசனின் அலுவலகத்துக்கு தினாவும் சங்க உறுப்பினர்களும் நேரில் சென்று கமல் ஹாசனிடம் கெளரவ உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார்கள்.
திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தில் கமல் ஹாசன் இணைந்தது சங்கத்துக்கும் இசைக்கலைஞர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளதாக தினா கூறியுள்ளார்.