முகப்பு
செய்திகள்

முகத்தைப் பாதுகாப்பதற்காக விளையாட்டில் ஈடுபடவில்லை: கமல் ஆதங்கம்

இதெல்லாம் பண்ணாதே, முகத்தை வைத்துத்தான் உனக்கு எதிர்காலம் என்று சொல்லிவிட்டார்கள்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:38 AM
பகிர்:

விளையாட்டில் ஈடுபட்டால் காயம் ஏற்பட்டு அது திரைப்படங்களில் நடிப்பதைப் பாதிக்கும் என்பதால் விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபட முடியாமல் போய்விட்டது என நடிகர் கமல் ஹாசன் கூறியுள்ளார். 

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டி வரும் 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இந்தியாவின் 22 மாநிலங்களைச் சேர்ந்த 119 போ் பங்கேற்கிறார்கள். இவர்களில் 67 வீரர்களும் 52 வீராங்கனைகளும் உள்ளார்கள். 18 விளையாட்டுகளில் 85 பதக்கங்கள் கொண்ட போட்டிகளில் இந்திய அணி பங்கேற்கிறது. ஜூலை 17 அன்று இந்தியக் குழுவினரின் முதல் அணி டோக்கியோவுக்குப் புறப்படுகிறது. அதில் 90 பேர் அடங்கிய வீரர்களும் அதிகாரிகளும் செல்வார்கள். 

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் நேத்ரா குமணன், வருண் ஏ. தக்கார், கே.சி. கணபதி, ஜி. சத்யன், ஷரத் கமல், சி.ஏ. பவானி தேவி, ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன், எஸ். தனலட்சுமி, ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி என 11 தமிழக வீரர்கள் பங்கேற்கிறார்கள். 

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்களிடம் இணையம் வழியாக நடிகர் கமல் ஹாசன் உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

இந்தியாவைத் திரும்பிப் பார்க்கும் முயற்சியில் நீங்கள் எல்லோரும் ஈடுபட்டுள்ளீர்கள். ஒரு திறமைசாலி நினைத்தால் ஏழ்மையை ஓட ஓட விரட்ட முடியும். நீங்கள் நாட்டின் செல்வங்கள். தங்கச்சுரங்கங்களுக்கு ஈடானவர்கள். 

விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபடவேண்டும் என நான் நினைத்தேன். ஆனால் திரைப்படங்கள் என்னை முழுவதுமாக ஆக்கிரமித்துக்கொண்டது என்பதுதான் உண்மை. சிறுவயதில் அதிகமாக கிரிக்கெட் விளையாடாதே, கறுத்துப் போய்விடுவாய், சினிமாவுக்குச் சரியாக இருக்காது என்றார்கள். சரி, நாம் பெரியவன் ஆனபிறகு இதுபற்றி முடிவெடுப்போம் என்பதற்குள் என்னை எல்லோரும் சேர்ந்து நட்சத்திரமாக்கி விட்டார்கள். நான் விளையாடியது எல்லாம் நட்சத்திர கிரிக்கெட்டும் நட்சத்திரக் கால்பந்தும் தான். சிறிய வயதில் உயரம் தாண்டுதல் எல்லாம் நன்றாகச் செய்து வந்தேன். ஆனால் எங்கேயாவது கீழே விழுந்து பல்லை உடைத்துவிடப் போகிறார், இதெல்லாம் பண்ணாதே, முகத்தை வைத்துத்தான் உனக்கு எதிர்காலம் என்று சொல்லிவிட்டார்கள். அதனால் உங்களையெல்லாம் எப்போதும் பொறாமையோடு பார்த்துக்கொண்டிருக்கும் ரசிகன் நான். நீங்கள் வெற்றியுடன் வரும்போது ஒருமுறை நேரில் சந்திப்போம் என்றார். 

முழு கட்டுரையைப் படிக்க →