செய்திகள்

மணி ரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று: போஸ்டர் வெளியானது

படம் 2022-ல் வெளியாகவுள்ளது.

DIN

எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கி வருகிறார் இயக்குநர் மணி ரத்னம்.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படத்தின் திரைக்கதையை மணி ரத்னமும் குமரவேலும் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். வசனம் - ஜெயமோகன், இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன். மெட்ராஸ் டாக்கீஸும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. 

பொன்னியின் செல்வன் படம் இரு பாகங்களாக வெளிவரவுள்ளது. இதையடுத்து பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தின் புதிய போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. போஸ்டரில் ஏ.ஆர். ரஹ்மான், ரவி வர்மன், தோட்டா தரணி, ஸ்ரீகர் பிரசாத், ஜெயமோகன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. படம் 2022-ல் வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இங்கிலாந்தின் தோல்வியை புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது: கெவின் பீட்டர்சன்

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 7

”நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது!" அண்ணாமலைக்கு பதிலளித்த தவெக அருண்ராஜ்!

SCROLL FOR NEXT