முகப்பு
செய்திகள்

புகைப்படம் எடுக்கும்போது குளத்தில் தவறி விழுந்த ரித்திகா - வெளியான விடியோ

இறுதிச்சுற்று புகழ் ரித்திகா புகைப்படம் எடுக்கும்போது குளத்தில் தவறி விழுந்த காட்சிகள் வெளியாகி, ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

'இறுதிச்சுற்று' புகழ் ரித்திகா புகைப்படம் எடுக்கும்போது குளத்தில் தவறி விழுந்த விடியோ காட்சிகளை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

'இறுதிச்சுற்று', 'ஆண்டவன் கட்டளை', 'ஓ மை கடவுளே' படங்களின் மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர் ரித்திகா. இவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் தனது புகைப்படங்களை பகிர்ந்து, ரசிகர்களை பெரிதும் மகிழ்வித்து வருகிறார். 

இந்த நிலையில் சமீபத்தில் புகைப்பட படப்பிடிப்பிற்கு கோயில் குளம் ஒன்றில் நின்று கொண்டிருக்கிறார். அப்போது தெரியாமல் தவறி விழுந்து விட்டார். இதனை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். 

அதில், ''ஈரமான உடையில் இருக்கும்படி புகைப்படம் எடுக்க நின்றுகொண்டிருந்தேன். ஆனால் எதிர்பாராத விதமாக குளத்தில் விழுந்துவிட்டேன். நீர் மூழ்கி கப்பல் போல் தண்ணீரில் மூழ்கினேன். வெளியே வந்தவுடன் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. இந்த விபத்துக்கு பிறகும் எனது புகைப்படக் குழுவினர், என்னை அழாக படம் பிடித்தனர் '' எனக்குறிப்பிட்டுள்ளார். இதற்கு அவரை பாதுகாப்பாக இருக்கும்படி ரசிகர்கள் அக்கறையுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →