பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ள சார்பட்டா பரம்பரை படத்தில் இருந்து வம்புல தும்புல விடியோ பாடல் வெளியாகியுள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் 'சார்பட்டா பரம்பரை'. 1980களில் காலக்கட்டங்களில் நடைபெறும் கதையாக இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் ஆர்யா கதநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார்.
மேலும் பசுபதி, கலையரசன், சஞ்சனா நடராஜன், அனுபமா குமார், சந்தோஷ் பிரதாப், ஜான் கொக்கென், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, முரளி.ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் வருகிற ஜூலை 22 ஆம் தேதி அமேசான் பிரைம் விடியோவில் வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து, வம்புல தும்புல என்ற பாடல் விடியோ வெளியாகியுள்ளது.
கபிலன் எழுதியுள்ள இந்த பாடலை , கானா முத்து, இசைவாணி, சந்தோஷ் நாராயணன், கானா தரணி உள்ளிட்டோர் பாடியுள்ளனர். வெற்றிக்கொண்டாட்ட பாடலாக இது அமைந்துள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு பா.ரஞ்சித் வெளியாகவிருக்கும் படம் என்பதால் சார்பட்டா பரம்பரை படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.