முகப்பு
செய்திகள்

தனது கதாபாத்திரத்தை அஜித்துக்கு அர்ப்பணித்த 'சார்பட்டா பரம்பரை' வில்லன் - காரணம் ?

சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி என்ற வேடத்தில் வில்லனாக நடித்துள்ள ஜான் கொக்கேன் தனது கதாபாத்திரத்தை நடிகர் அஜித்திற்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளார்.  

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி என்ற வேடத்தில் வில்லனாக நடித்துள்ள ஜான் கொக்கேன் தனது கதாபாத்திரத்தை நடிகர் அஜித்திற்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளார். 

பா.ரஞ்சித் இயக்கத்தில் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள படம் சார்பட்டா பரம்பரை. ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்க, பசுபதி, அனுபமா, சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கேன், சந்தோஷ் பிரதாப், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

சந்தோஷ் நாராயணன் இந்த படத்துக்கு இசையமைக்க, முரளி.ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். 1980களில் சென்னையில் நடைபெறும் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்த படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.   

இந்த நிலையில் இந்த படத்தில் வேம்புலி என்ற எதிர்மறை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ஜான் கொக்கேன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'என்னை எப்பொழுதும் ஊக்குவிப்பதற்கு நன்றி அஜித் சார். 'வீரம்' படத்தின் படப்பிடிப்பின் போது உங்களுடன் செலவிட்ட நாட்கள் என் வாழ்க்கைக்கான பாடம். ஒவ்வொரு நான் கடினமாக உழைப்பதற்கும், நல்ல மனிதனாக இருப்பதற்கும் நீங்கள் எனக்கு தூண்டுகோலாக இருக்கிறீர்கள். வெம்புலி என்ற எனது கதாபாத்திரத்தை நான் உங்களுக்கு சமர்பிக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.  

முழு கட்டுரையைப் படிக்க →