செய்திகள்

'எதற்கும் துணிந்தவன்' சூர்யா - முதல் பார்வை போஸ்டர் வெளியீடு

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

DIN

சன் பிக்சர்ஸ் சார்பாக கலாநிதி மாறன் தயாரிப்பில் சூர்யா ஒரு படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 40வது படமான இதனை, இயக்குநர் பாண்டிராஜ் இயக்குகிறார். டி.இமான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். 

ரத்னவேலு இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் நடித்துள்ள பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. 

நடிகர் சூர்யாவுக்கு நாளை பிறந்த நாள் என்பதால், இந்த முதல் பார்வை மற்றும் மோஷன் போஸ்டர் அவருக்கு பிறந்த நாள் பரிசாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு 'எதற்கும் துணிந்தவன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்பப்பை இப்பொழுதே அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT