செய்திகள்

விஜய் டிவி நிகழ்ச்சியை விட்டு பாதியில் வெளியேறியது ஏன் ? - வனிதா அதிரடி

விஜய் டிவி நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறியதற்கான காரணத்தை வனிதா அதிரடியாக தெரிவித்தார். 

DIN

விஜய் டிவி நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறியதற்கான காரணத்தை வனிதா அதிரடியாக தெரிவித்தார். 

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டவர் வனிதா. அதனைத் தொடர்ந்து 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் தனது சமையல் திறமைகளால் அந்த நிகழச்சியின் வெற்றியாளரானார். பின்னர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகக் கலந்துகொண்டார். 

நடிகை வனிதாவை எப்பொழுதும் ஏதாவது சர்ச்சைகள் தொடர்ந்துகொண்டே வருகின்றன. ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவகாரத்துப் பெற்ற வனிதா, மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை எளிமையாக திருமணம் செய்திருந்தார். இதனயைடுத்து பீட்டர் பாலின் மனைவி, தன்னை விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்துகொண்டதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்க, பிரச்னை வெடித்தது. பின்னர் பீட்டர் பாலுடனான உறவை முறித்துக்கொண்டார் வனிதா. 

 கடந்த சில மாதங்களாக வனிதா 4வதாக ஒருவரை திருமணம் செய்துகொண்டதாக தகவல் பரவ, அதனைத் திட்டவட்டமாக வனிதா மறுத்தார். இந்த நிலையில் நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசனுடன் திருமணக் கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை வனிதா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர அது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்தப் புகைப்படம் பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன் மற்றும் வனிதா இருவரும் இணைந்து நடிக்கும் 'பிக்கப் டிராப்' என்ற படத்துக்காக எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது. 

இந்தப் படத்தின் அறிமுக விழாவில் பேசிய அவர், தான் விஜய் டிவி நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறியதன் காரணத்தை தெரிவித்தார். அப்போது அந்த நிகழ்ச்சிக் குழுவினர் என்னிடம் அந்த நிகழ்ச்சி பற்றி சொன்னது ஒருவிதமாகவும் நிகழ்ச்சி எடுக்கப்பட்டது ஒருவிதமாகவும் இருந்தது. நான் ஏற்கனவே கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்திருக்கிறேன். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான் வெற்றியாளர். நான் எப்படி மீண்டும் இன்னொரு நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்துகொள்ள முடியும்?. மேலும் எனக்கு அந்த நிகழ்ச்சியில் நடுவர்களின் தீர்ப்பு பிடிக்கவில்லை. ஒரே மாதிரியான போட்டியாளர்கள் மட்டுமே ஒப்பிட வேண்டும். ஆரோக்கியமான விமர்சனங்களை நான் ஏற்றுக்கொள்ளத் தயார். ஆனால் அங்கே அப்படி நடைபெறவில்லை'' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT