மாமல்லபுரம் அருகே சூளேரிக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் கார் விபத்துக்குள்ளானதில் பிரபல நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயமடைந்துள்ளார்.
சென்னையிலிருந்து ஒரு காரில் 4 பேர் (2 ஆண், 2 பெண்) புதுச்சேரி சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை திரும்பி கொண்டிருந்தனர். மாமல்லபுரம் அருகே சூளேரிக்காடு என்ற இடத்தில் செல்லும்போது கார் நிலை தடுமாறி சென்டர் மீடியனில் மோதி விபத்துள்ளானது.
இந்த விபத்தில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த வள்ளிசெட்டி பவனி (28) என்ற பெண் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அமெரிக்காவில், மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றும் இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்புதான் சென்னை வந்துள்ளார்.
இவர் உடன் வந்து படுகாயமடைந்த சின்னத்திரை நடிகை யாஷிகா ஆனந்த் (21) சென்னை மலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர். இவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உடன் வந்த 2 ஆண்களும் லேசான காயத்துடன் சென்னையில் உள்ள இரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் காரில் வரும்போது பாடல் போட்டு கார் டாப் மீது ஏறி டான்ஸ் ஆடி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மது அருந்துவிட்டு வரும்போது இந்த விபத்து ஏற்பட்டதா, என மாமல்லபுரம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
யாஷிகா ஆனந்த் மீது வழக்கு பதிவு:
அதிவேகமாக கார் ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்தியதாக யாஷிகா ஆனந்த் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் நடராஜன் விசாரணை நடத்தி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.