செய்திகள்

மூத்த இயக்குநர் ஜி.என். ரங்கராஜன் காலமானார்

DIN

பழம்பெரும் இயக்குநர் ஜி.என். ரங்கராஜன் மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 90.

கமல் ஹாசன் நடித்த கல்யாண ராமன், கடல் மீன்கள், மீண்டும் கோகிலா, எல்லாம் இன்பமயம், மகாராசன் படங்களை இயக்கியவர் ஜி.என். ரங்கராஜன். இவர் இயக்கத்தில் தொடர்ந்து நான்கு படங்கள் 175 நாள்களுக்குத் திரையரங்குகளில் ஓடியதால் புகழ்பெற்ற இயக்குநராக இருந்தார். முத்து எங்கள் சொத்து, அடுத்தாத்து ஆல்பர்ட், மனக்கணக்கு, பல்லவி மீண்டும் பல்லவி போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். இவருடைய மகன் ஜி.என்.ஆர். குமரவேலன் - நினைத்தாலே இனிக்கும் (2009), யுவன் யுவதி, ஹரிதாஸ், வாகா போன்ற படங்களை இயக்கியுள்ளார். அருண் விஜய் நடிப்பில் சினம் என்கிற படத்தை இயக்கி வருகிறார். 

இந்நிலையில் இன்று காலை மாரடைப்பால் ஜி.என். ரங்கராஜன் காலமானார். ரங்கராஜனின் மறைவுக்குத் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

SCROLL FOR NEXT