விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள படம் - நெற்றிக்கண்.
மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு இசை - கிரிஷ் கோபாலகிருஷ்ணன். ஒளிப்பதிவு - ஆர்டி ராஜசேகர்.
நெற்றிக்கண் படத்தில் நயன்தாரா, அஜ்மல், மணிகண்டன், சரண் போன்றோர் நடித்துள்ளார்கள்.
இந்நிலையில் நெற்றிக்கண் படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கரோனா ஊரடங்கு காரணமாகத் திரையரங்குகளில் இயங்காத நிலையில் படத்தை ஓடிடியில் வெளியிட நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து இதுகுறித்த அதிகாபூர்வ விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.