செய்திகள்

ஓடிடியில் வெளியாகும் லீனா மணிமேகலையின் மாடத்தி

தென் தமிழகத்தில் வாழும் புதிரை வண்ணார் சமூக மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு...

DIN

கருவாச்சி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கவிஞர் லீனா மணிமேகலை இயக்கியுள்ள படம் மாடத்தி. செம்மலர் அன்னம், அஜ்மினா கஸிம், அருள் குமார், ஸ்டெல்லா ராஜ் போன்றோர் நடித்துள்ளார்கள். தென் தமிழகத்தில் வாழும் புதிரை வண்ணார் சமூக மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு மாடத்தி-யின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. 

ஒளிப்பதிவு -  ஜெஃப் டோலன், அபிநந்தன் ராமானுஜம், கார்த்தி முத்துகுமார். இசை - கார்த்திக் ராஜா. படத்தொகுப்பு - தங்கவேல் பழனிவேல். திரைக்கதை - லீனா மணிமேகலை, ரஃபிக் இஸ்மாயில், யவனிகா ஸ்ரீராம். 

இப்படத்தின் டீசரை 2019-ல் பிரபல நடிகை நந்திதா தாஸ் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார். தற்போது இப்படத்தின் வெளியீடு உள்ளிட்ட தகவல்களைச் சமூகவலைத்தளத்தில் மற்றொரு பிரபல நடிகையான பார்வதி வெளியிட்டுள்ளார்.

பல சர்வதேசப் பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ள மாடத்தி படம், நீஸ்டிரீம் ஓடிடி தளத்தில் ஜூன் 24 அன்று வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோஹிங்கயாக்கள் இன அழிப்பு: மியான்மருக்கு எதிராக விசாரணை தொடக்கம்!

போலி ஆவணங்கள் மூலம் வெளிநாட்டில் இருந்து திருச்சி வந்தவா் கைது

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜிஎஸ்டி சாலைப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்

இன்று இந்தியா ஓபன் 2026 பாட்மின்டன் தொடக்கம்: 256 வீரா், வீராங்கனைகள் பங்கேற்பு!

சுஸுகி மோட்டாா்சைக்கிள் விற்பனை 26% உயா்வு!

SCROLL FOR NEXT