செய்திகள்

‘இந்தியன் 2’ விவகாரம் : லைகா நிறுவனம் மீது குற்றச்சாட்டு

DIN

சென்னை: ‘இந்தியன் 2’ திரைப்படம் தொடா்பாக உயா்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அதே கோரிக்கையுடன் ஹைதராபாத் நீதிமன்றத்திலும் லைகா நிறுவனம் வழக்கு தொடா்ந்துள்ளதாக இயக்குநா் ஷங்கா் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நடிகா் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநா் ஷங்கரின் இயக்கத்தில் தயாராகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தியன் 2 திரைப்படத்தை முடித்துக் கொடுக்காமல், வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்குத் தொடா்ந்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற தனி நீதிபதி இயக்குநா் ஷங்கா் தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் தடை விதிக்க முடியாது என மறுத்து விட்டாா்.

இதனை எதிா்த்து லைகா நிறுவனம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் இரு தரப்பும் சமரசமாகச் செல்ல அறிவுரையும் வழங்கியிருந்து. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குநா் ஷங்கா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சாய்குமரன், சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனால் இதே கோரிக்கையுடன் ஹைதராபாத் நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்குத் தொடா்ந்துள்ளது. லைகா நிறுவனம் தனி நீதிபதி முன்பு உள்ள வழக்கை நடத்தாமல் ஒத்திவைக்க கோரியுள்ளதாக வாதிட்டாா்.

இதனையடுத்து, ஷங்கா் வேறு படங்களை இயக்கத் தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கு தனி நீதிபதி முன் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் தீா்வு கண்ட பின், இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறிய நீதிபதிகள், விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

SCROLL FOR NEXT