முகப்பு
செய்திகள்

காஜல் அகர்வாலுடன் இணைந்து எடுத்த 30 புகைப்படங்களை வெளியிட்ட கணவர்

காஜல் அகர்வாலுடன் இணைந்து எடுத்த 30 புகைப்படங்களைத் தொகுத்து இன்ஸ்டகிராமில் விடியோவாக வெளியிட்டுள்ளார்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
படம் - www.instagram.com/kajalaggarwalofficial
பகிர்:

காஜல் அகர்வாலின் பிறந்த நாளான இன்று அவருடன் இணைந்து எடுத்த 30 புகைப்படங்களை விடியோவாக வெளியிட்டுள்ளார் கணவர் கெளதம் கிச்லு.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபல நடிகையாக உள்ளார் காஜல் அகர்வால். தமிழில் கடைசியாக, இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை தொடந்து, காஜல் மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் படம் - பாரிஸ் பாரிஸ். நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் பாலிவுட் திரையில் வெளியாகி, கங்கனாவிற்கு தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்த குயின் படத்தின் ரீமேக்காக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கமல் ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். கடந்த வருடம் அக்டோபர் 30 அன்று தொழிலதிபர் கெளதம் கிச்லுவைத் திருமணம் செய்தார். ஹாட்ஸ்டாரில் சமீபத்தில் வெளியான லைவ் டெலிகாஸ்ட் இணையத்தொடரிலும் நடித்திருந்தார். உமா என்கிற ஹிந்தி படமொன்றில் நடிக்க சமீபத்தில் ஒப்பந்தமானார். 

இந்நிலையில் தனது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார் காஜல் அகர்வால். இதையடுத்து அவருடன் இணைந்து எடுத்த 30 புகைப்படங்களைத் தொகுத்து இன்ஸ்டகிராமில் விடியோவாக வெளியிட்டுள்ளார் கணவர் கெளதம் கிச்லு. 

முழு கட்டுரையைப் படிக்க →