முகப்பு
செய்திகள்

விஜய் நடிப்பில் ஜேம்ஸ் பாண்ட் படம்: மிஷ்கின் திட்டம்

விஜய்யை வைத்து படம் இயக்குவதாக இருந்தால் அது ஜேம்ஸ் பாண்ட் படம் போல ஒரு திரில்லராக இருக்கும் என....

Updated On : 23 ஜூன், 2021 at 1:39 PM
பகிர்:

விஜய்யை வைத்து படம் இயக்குவதாக இருந்தால் அது ஜேம்ஸ் பாண்ட் படம் போல ஒரு திரில்லராக இருக்கும் என இயக்குநர் மிஷ்கின் கூறியுள்ளார். 

இயக்குநர் மிஷ்கின், வின்சென்ட் செல்வாவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். அவர் இயக்கிய யூத் படத்தில் மிஷ்கின் பணிபுரிந்தபோது விஜய்யுடனான அறிமுகம் கிடைத்தது. சித்திரம் பேசுதடி படத்துக்கு முதலில் விஜய்யை அணுக மிஷ்கின் நினைத்தார். ஆனால் கதையில் விஜய்யும் அவருடைய தந்தை எஸ்.ஏ.சி.யும் தலையிட்டு மாற்றங்கள் செய்வார்கள் எனப் பயந்து விஜய்யிடம் கதை சொல்லும் திட்டத்தை கைவிட்டார்.

இந்நிலையில் ட்விட்டர் ஸ்பேசஸ் உரையாடலில், ரசிகர் ஒருவர் மிஷ்கினிடம் விஜய்யை இயக்குவதாக இருந்தால் அது எவ்விதப் படமாக இருக்கும் எனக் கேட்டார், அதற்குப் பதில் அளித்த மிஷ்கின், ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் போல ஒரு திரில்லர் படத்தை விஜய்யை வைத்து இயக்க ஆசை என்று கூறினார். மேலும் பிசாசு 2 படத்தைப் பற்றி பேசிய மிஷ்கின், இப்படத்துக்காக ஆண்ட்ரியாவுக்குத் தேசிய விருது கிடைக்கும் என்றார். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.