செய்திகள்

முடிவடையும் நிலையில் ஆர்ஆர்ஆர் படப்பிடிப்பு: அதிகாரபூர்வத் தகவல்

DIN

இரு பாடல்களைத் தவிர இதர காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டதாக ஆர்ஆர்ஆர் படக்குழு அறிவித்துள்ளது.

பாகுபலி 2 படத்துக்கு அடுத்ததாக, ஆர்ஆர்ஆர் (இரத்தம், ரணம், ரெளத்திரம்) என்கிற படத்தை எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கி வருகிறார்.

ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் டிவிவி தனய்யா-வின் டிவிவி எண்டெர்டயிண்மெண்ட் இப்படத்தைத் தயாரிக்கிறது. முதல்முறையாக ஜூனியர் என்டிஆரும் ராம் சரணும் இணைந்து நடிக்கிறார்கள். ராஜமெளலியும் ஜூனியர் என்டிஆரும் இதற்கு முன்பு மூன்று படங்களில் இணைந்துள்ளார்கள். மகதீராவுக்குப் பிறகு ராஜமெளலியும் ராம் சரணும் இப்படத்தில் மீண்டும் இணைகிறார்கள். ஆர்ஆர்ஆர் படத்துக்கு கீரவாணி இசையமைக்கிறார். ஒளிப்பதிவு - கே.கே. செந்தில் குமார்.

அல்லுரி சீதா ராமராஜூ, கொமரம் பீம் என்கிற இரு சுதந்திரப் போராட்ட வீரர்களை வாழ்க்கையை முன்வைத்து ஆர்ஆர்ஆர் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதை 1920களில் நடைபெறுகிறது.

பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட், தமிழ் நடிகர் சமுத்திரக்கனி, ஒலிவியா மாரிஸ், ஸ்ரியா சரண் போன்றோரும் நடிக்கிறார்கள். ஆர்ஆர்ஆர் படம் அக்டோபர் 13 அன்று தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் இதர இந்திய மொழிகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ஆர்ஆர் படத்தை தமிழகத்தில் திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளது.

திரையரங்குகளில் வெளியாகி குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு ஆர்ஆர்ஆர் படத்தின் ஹிந்திப் பதிப்பு நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. இந்தப் படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஜீ5 ஓடிடியில் வெளியாகவுள்ளது. ஆங்கிலம், கொரியன் உள்பட வெளிநாட்டு மொழிகளில் நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது. தொலைக்காட்சி உரிமை ஜீ சினிமா (ஹிந்தி), ஸ்டார் (தெலுங்கு), விஜய் டிவி (தமிழ்), ஏசியாநெட் (மலையாளம்), ஸ்டார் (கன்னடம்) போன்றவற்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஆர்ஆர்ஆர் படப்பிடிப்பு நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் இரு பாடல்கள் மட்டுமே மீதமுள்ளன. மற்றபடி ஆர்ஆர்ஆர் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது. ஜூனியர் என்டிஆரும் ராம் சரணும் இரு மொழிகளுக்கான டப்பிங்கை முடித்துவிட்டார்கள். இதர வேலைகள் விரைவில் முடிவடைந்துவிடும் எனப் படக்குழு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் புதிய புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

கேண்டி மலையில் ஆண்ட்ரியா!

SCROLL FOR NEXT