முகப்பு
செய்திகள்

ஓடிடியில் வெளியாகிறதா பா. இரஞ்சித் - ஆர்யா படம்?

பா. இரஞ்சித் - ஆர்யா கூட்டணியில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை படம் அமேசான் பிரைம் ஓடிடியில்...

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

பா. இரஞ்சித் - ஆர்யா கூட்டணியில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கியுள்ளார் பா. இரஞ்சித். காலா படத்துக்குப் பிறகு பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைக்குண்டு ஆகிய படங்களைத் தயாரித்தார். 

ஆர்யா நடிக்கும் படத்தைத் தற்போது இயக்கியுள்ளார் பா. இரஞ்சித். குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடித்துள்ள இப்படத்துக்கு சார்பட்டா பரம்பரை எனப் பெயரிடப்பட்டுள்ளது. இசை - சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு - முரளி. சார்பட்டா பரம்பரை படத்தின் படப்பிடிப்பு, கடந்த டிசம்பர் மாதம் நிறைவுபெற்றது.

இந்நிலையில் இந்தப் படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாகத் தெரிகிறது. தமிழ்நாட்டில் திரையரங்குகள் எப்போது மீண்டும் இயங்கும் என்று தெளிவாகத் தெரியாத நிலை மற்றும் கரோனா அச்சுறுத்தல் ஆகிய காரணங்களால் படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது. இதையடுத்து இதுகுறித்த அதிகாரபூர்வத் தகவல் விரைவில் வெளியாகவுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →