செய்திகள்

மூத்த நடிகர் திலீப் குமார் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி

98 வயது திலீப் குமாருக்குச் சமீபத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மும்பையில் உள்ள...

DIN

மூத்த நடிகர் திலீப் குமார் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியத் திரையுலகின் மகத்தான நடிகர்களில் ஒருவரான திலீப் குமார், 1994-ல் தாதாசாகேப் பால்கே விருதை வென்றார். மத்திய அரசின் பத்ம பூஷன், பத்ம விபூஷன் பட்டங்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதுகளை அதிகமுறை வென்றுள்ளார். 1944-ல் நடிகராக அறிமுகமாகி, 50 ஆண்டுகளில் 65 படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 1998-ல் நடித்தார்.

98 வயது திலீப் குமாருக்குச் சமீபத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து ஆக்சிஜன் உதவியுடன் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இரு வாரங்களுக்கு முன்பு வீடு திரும்பினார். 

இந்நிலையில் மூச்சுத் திணறல் மீண்டும் ஏற்பட்டதால் இந்த மாதம் 2-வது முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் திலீப் குமார். மும்பை ஹிந்துஜா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருடைய உடல்நிலை சீராக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ.87.58ஆக நிறைவு!

நூறு கோடி வானவில்... மாளவிகா மனோஜ்!

இதுவரை இல்லாத பேட்டரி திறன்... விவோ ஒய் 500 சிறப்புகள் என்ன?

மலையாளக் கவிதை... அனுமோள்!

'அவர் என்னுடைய அம்மாவே இல்லை' - பவுன்சரால் தூக்கிவீசப்பட்ட இளைஞர் விளக்கம்!

SCROLL FOR NEXT