முகப்பு
செய்திகள்

கமல்ஹாசனை இயக்கும் வெற்றிமாறன்?

நடிகர் கமல்ஹாசனை வைத்து வெற்றிமாறன் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

நடிகர் கமல்ஹாசனை வைத்து வெற்றிமாறன் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பொல்லாதவன் படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். இவர் ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்தவர். 

வெற்றிமாறன் தற்போது நடிகர் சூரி கதாநாயனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். இதில் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' என்ற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது.

அடுத்ததாக வெற்றிமாறன், நடிகர் சூர்யாவின் ‘வாடிவாசல்’ படத்தை இயக்கவிருக்கிறார். 

இதற்கு அடுத்தபடியாக வெற்றிமாறன் கமல்ஹாசனை வைத்து ஒரு படத்தை இயக்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கமல் - வெற்றிமாறன் முதல்முறையாக இணையும் இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'விக்ரம்' படத்தில் நடித்துவரும் நடிகர் கமல்ஹாசன், அடுத்ததாக வெற்றிமாறனின் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →