செய்திகள்

மூத்த நடிகர் நசீருதீன் ஷா மருத்துவமனையில் அனுமதி

நிமோனியா தொற்று பாதிப்பு காரணமாகக் கடந்த இரு நாள்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்...

DIN

மூத்த நடிகர் நசீருதீன் ஷா, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1967 முதல் திரைப்படங்களில் நடித்து வருகிறார் நசீருதீன் ஷா. 1980களில் புகழ்பெற்ற நடிகராக விளங்கினார். தொலைக்காட்சி, இணையத்தொடர்களிலும் நடித்துள்ளார். நடிப்புக்காக மூன்று முறை தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். 1987-ல் பத்மஸ்ரீ 2003-ல் பத்மபூஷன் விருதுகளைப் பெற்றார்.  

இந்நிலையில் நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ள நசீருதீன் ஷா சிகிச்சைக்காக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நிமோனியா தொற்று பாதிப்பு காரணமாகக் கடந்த இரு நாள்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் நசீருதீன் ஷா. அவருக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்கிற நிலை உருவானது என்று நசீருதீன் ஷாவின் மேலாளர், ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் தகர்ப்போம்! பாகிஸ்தான் ராணுவ தளபதி

இந்த வார்த்தைகள் உங்களை அடைந்தால்.. அல் ஜஸீரா செய்தியாளரின் உருக்கமான இறுதிப் பதிவு

எதிர்நீச்சல் - 2 தொடரிலிருந்து விலகிய கனிகா.... காரணம் என்ன?

இபிஎஸ் ஒன்றும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அல்ல!அதிமுகவின் தோல்வி மேற்கிலிருந்து தொடங்கும்! முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

உத்தரகண்டில் மஞ்சள் எச்சரிக்கை: மீட்பு பணியில் தொய்வு!

SCROLL FOR NEXT