முகப்பு
செய்திகள்

ஜூன் மாதம் குழந்தை பிறக்கப் போகிறது: நடிகை உற்சாகம்

இப்போது அனைவரிடமும் பகிர நானும் ஜோவும் ஆர்வமாக உள்ளோம்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

2010-ல் லீடர் என்கிற தெலுங்குப் படம் மூலமாக அறிமுகமான ரிச்சா, அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியர். தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் மயக்கம் என்ன படத்தில் நடித்தவர் பிறகு சிம்பு நடித்த ஒஸ்தி படத்திலும் நடித்தார். பிறகு வரிசையாக தெலுங்குப் படங்களில் நடித்தவரைப் பற்றி சில வருடங்களாகத் தகவல்கள் எதுவும் இல்லை.

தான் நடிப்பை விட்டு விலகியுள்ளதாக 2017-ல் ட்விட்டரில் அறிவித்தார் ரிச்சா. பிறகு, ஜோ என்கிறவரைக் காதலித்து 2019-ல் திருமணம் செய்தார். அமெரிக்காவில் தற்போது வசிக்கும் ரிச்சா, வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்துள்ளார். இந்நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதாக ரிச்சா கூறியுள்ளார். ட்விட்டரில் அவர் தெரிவித்ததாவது:

இதை ரகசியமாக நாங்கள் வைத்திருந்தோம்.

இப்போது அனைவரிடமும் பகிர நானும் ஜோவும் ஆர்வமாக உள்ளோம்.

ஜூன் மாதம் குழந்தை பிறக்கப் போகிறது.

மிகவும் மகிழ்ச்சியாகவும் எங்களுடைய குழந்தையைக் காண ஆவலாகவும் உள்ளோம் என்று கூறியுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →