செய்திகள்

ஹலிதா இயக்கிய ஏலே: நெட்பிளிக்ஸில் வெளியானது!

ஏலே படம், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது. 

DIN

பூவரசம் பீப்பி என்கிற படத்தை இயக்கிய ஹலிதா ஷமீம், அடுத்ததாக சில்லுக் கருப்பட்டி என்கிற படத்தை இயக்கி அதிக கவனம் பெற்றார்.

ஹலிதா தற்போது இயக்கியுள்ள படம் - ஏலே. இப்படத்தின் படப்பிடிப்பு பழனியில் 2019-ம் ஆண்டு மே 3 அன்று தொடங்கியது. 

இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி, வால்வாட்சர் ஃபிலிம்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்கள். வால்வாட்சர் மற்றும் வொய்நாட் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து ஏலே படத்தைத் தயாரித்துள்ளார்கள்.  

சமுத்திரக்கனி, மணிகண்டன் போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - அருள்தேவ். பிப்ரவரி 12 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

விஜய் நடித்த மாஸ்டர் படம் திரையரங்குகளில் வெளியான 16 நாள்களில் ஓடிடியிலும் வெளியானது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். இதையடுத்து இனிமேல் சிறிய பட்ஜெட் படங்கள் திரையரங்குகளில் வெளியான 30 நாள்களுக்குப் பிறகும் பெரிய பட்ஜெட் படங்கள் திரையரங்குகளில் வெளியான 50 நாள்களுக்குப் பிறகும் தான் ஓடிடிடியில் வெளியாக வேண்டும். இதுகுறித்து தயாரிப்பாளர்கள் கடிதம் அளிக்க வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் நிபந்தனை விதித்துள்ளார்கள்.

இதனால் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள ஏலே படம் திரையரங்குகளில் வெளியாகாமல் விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக பிப். 28 அன்று வெளியானது. 

இந்நிலையில் ஏலே படம், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 4 காசுகள் சரிந்து ரூ.90.21ஆக நிறைவு!

மன அழுத்தம்... உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கிறதா?

“நம் DATA நம் கையில்!” சர்வம் AI உடனான ஒப்பந்தத்தின் பயன்களை விளக்கிய அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா!

ஈரானில் தீவிரமடையும் போராட்டம்! பலி 600-ஐ கடந்தது!

சென்செக்ஸ் 250 புள்ளிகளுடனும், நிஃப்டி 58 புள்ளிகளுடன் சரிந்து நிறைவு!

SCROLL FOR NEXT