செய்திகள்

வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்துக்குத் தேசிய விருது!

வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம், சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளது. 

DIN

வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம், சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளது. 

67-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. 2019-ம் ஆண்டில் வெளியான படங்களுக்கு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வருடத்திலும் ஏப்ரல் மாதம் திரைப்பட தேசிய விருதுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும். ஆனால் கடந்த வருடம் கரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக தேசிய விருது அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டது. 

66-வது தேசிய திரைப்பட விருதுகள், 2019-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. அதில் சிறந்த தமிழ்த் திரைப்படமாக 'பாரம்' தேர்வானது. வேறு எந்தப் பிரிவிலும் தமிழ்த் திரையுலகுக்கு விருது கிடைக்கவில்லை. 

இந்நிலையில் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம்,  சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அவதாருடன் போட்டி! ரூ. 1,000 கோடி வசூலை நோக்கி துரந்தர்!

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

விஜய் இப்போது நடிகர் அல்ல: அருண் ராஜ்

2026 பேரவைத் தேர்தல்: பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்!

SCROLL FOR NEXT