முகப்பு
செய்திகள்

இரு நடிகர்களுக்குத் தேசிய விருது வழங்குவது ஏன்?: கங்கை அமரன் விளக்கம்

இந்தமுறை எனக்குத் திருப்தி தான். போராட வேண்டிய அவசியம் வரவில்லை...

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை இரு நடிகர்களுக்கு வழங்குவது ஏன் என்கிற கேள்விக்கு கங்கை அமரன் பதில் அளித்துள்ளார்.

2019-ம் ஆண்டிற்கான 67-வது தேசிய விருது நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ்த் திரைப்படங்களுக்கு 6 தேசிய விருதுகள் உள்ளிட்ட 7 விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அசுரன் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை தனுஷ் பெற்றுள்ளாா். 

சிறந்த குணச்சித்திர நடிகா் (துணை நடிகா்) - விஜய் சேதுபதி (படம்: சூப்பா் டீலக்ஸ்); சிறந்த இசையமைப்பாளர் - டி. இமான் (விஸ்வாசம்), சிறந்த குழந்தை நட்சத்திரம் - நாக விஷால் (கேடி (எ) கருப்பு துரை), சிறந்த ஒலிப்பதிவு மற்றும் சிறப்பு ஜூரி விருது என இரண்டு விருதுகள் - ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ்ப் படமாக வெற்றி மாறன் இயக்கிய அசுரன் தேர்வாகியுள்ளது. பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய்க்கும் (போஸ்லே) சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்த கங்கை அமரன், செய்தியாளர்களிடம் பேசியதாவது:

ஒரு மாதத்தில் 106 படங்கள் பார்த்தோம். விருதுக்குத் தேர்வு செய்வது கஷ்டமாக இருந்தது. பல புதிய மொழிகளில் நல்ல படங்கள் வந்துள்ளன. அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காகப் பல விஷயங்களை விட்டுக்கொடுத்தோம். தமிழுக்கு ஏழு விருதுகள் கிடைத்துள்ளன. இந்தமுறை எனக்குத் திருப்தி தான். போராட வேண்டிய அவசியம் வரவில்லை. தனுஷின் தேர்வை எல்லோரும் ஒப்புக்கொண்டார்கள். ஒத்த செருப்பு படத்தில் பார்த்திபனுக்கு எந்தப் பிரிவில் விருது வழங்குவது எனத் தெரியவில்லை. கதை, வசனம், நடிப்பு என எல்லாவற்றையும் அவரே செய்திருந்தார். எல்லாப் பிரிவுகளிலும் நன்றாகச் செய்துள்ளார் என்று சொன்னார்கள். நிறைய போட்டி இருந்ததால் இரு நடிகர்கள், சிறந்த நடிப்புக்கான தேசிய விருதைப் பெறுகிறார்கள். மனோஜ் பாஜ்பாயும் நன்றாக நடித்திருந்ததால்  அவருக்கும் விருது வழங்கலாம் என விருதுக்குழுத் தலைவர் கூறினார் என்றார். 

முழு கட்டுரையைப் படிக்க →