முகப்பு
கிரிக்கெட்

அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!

பிங்க் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய மகளிரணியின் பேட்டிங் குறித்து...

Updated On : 7 மார்ச், 2026 at 4:21 PM
சதம் அடித்த மகிழ்ச்சியில் அன்னாபெல் சதர்லேண்ட். - படம்: எக்ஸ் / Victorian Cricket Team.
பகிர்:

இந்திய மகளிருக்கு எதிராக பிங்க் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய மகளிரணி முதல் இன்னிங்ஸில் 300 ரன்கள் குவித்துள்ளது.

முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பேட்டிங் செய்த இந்திய மகளிரணி 198 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.

இந்தியா சார்பாக ஜெமிமா ரோட்ரிகஸ் அரைசதம் அடித்து அசத்தினார். மற்ற நட்சத்திர வீராங்கனைகள் சொதப்பினார்கள். இறுதியில் பந்துவீச்சாளர் கஷ்வீ கௌதம் 34 ரன்கள் எடுத்து அசத்தினார்.

Advertisement

ஆஸ்திரேலிய அணி சார்பில் அன்னாபெல் சதர்லேண்ட் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். லூசி ஹாமில்டன் 3, டார்சி புரௌன் 2 விக்கெட்டும் எடுத்தார்கள்.

தற்போது, முதல் இன்னிங்ஸை விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி 90.4 ஓவர்களில் 323 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸி. அணி 125 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.

2-1 என டி20 தொடரை வென்ற இந்திய அணி ஒருநாள் தொடரை 0-3 என இழந்தது. ஒரே ஒரு டெஸ்ட் போட்டியாக நடைபெறும் இந்தப் போட்டியில் இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ஆஸி. மகளிரணியின் கேப்டன் அலீஷா ஹீலிக்கு இதுதான் கடைசி போட்டியாக இருக்கிறது. இந்தப் போட்டிக்குப் பிறகு அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இரண்டாவது பந்தில் போல்ட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

summary

Annabel Sutherland century Australia Women lead by 123 runs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.