செய்திகள்

இயக்குநர் விஜய்யைப் புகழ்ந்து தள்ளிய நடிகை கங்கனா ரணாவத்!

DIN

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் அவருடைய கதாபாத்திரத்தில்  பாலிவுட் நாயகி கங்கனா ரணாவத் நடித்துள்ளார். ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அவரது வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் வகையில் தமிழ், ஹிந்தி மொழிகளில் இத்திரைப்படம் தயாராகியுள்ளது. 

விஜய் இயக்கியுள்ள இப்படத்துக்கான கதையை பாகுபலி, மணிகர்னிகா திரைப்படங்களின் கதாசிரியரும் இயக்குநர் ராஜமெளலியின் தந்தையுமான கே.வி.விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங் ஆகியோர் தயாரிக்கின்றனர். இசை - ஜி.வி. பிரகாஷ். தலைவி படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தலைவி டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகை கங்கனா ரணாவத் பேசியதாவது:

எனது திறமையைக் குறைவாக எண்ண வைக்காத ஒரு இயக்குநரை என் வாழ்வில் முதல்முறையாகச் சந்தித்துள்ளேன். நான் உணர்வுபூர்வமாக உள்ளேன். எப்போதும் நான் இப்படி இருக்கமாட்டேன். ஆனால் விஜய் மட்டுமே என் திறமையை எண்ணி நான் பெருமைப்படும் விதத்தில் நடந்துகொண்டார். கதாநாயகர்களிடம் காண்பிக்கும் நம்பிக்கையைக் கதாநாயகிகளிடம் காண்பிக்க மாட்டார்கள். ஆனால் நடிகர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதை விஜய்யிடம் கற்றுக்கொண்டேன். 

தென்னிந்தியத் திரையுலகில் வாரிசு அரசியல் இல்லை. குழு மனப்பான்மை இல்லை. ஒருவரைப் பற்றி தவறாகப் பேசுவதில்லை. இங்கே நிறைய படங்கள் பண்ண வேண்டும் என நினைக்கிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

SCROLL FOR NEXT